[Chennaipy] Free Python Training Link and Request to ChennaiPy Team
முத்துராமலிங்கம் கிருட்டினன்
muthu1809 at gmail.com
Tue Jun 16 01:51:43 EDT 2020
அனைவருக்கும் வணக்கம். என் பெயர் முத்துராமலிங்கம். நான் கடந்த ஒரு
மாதமாகப் பைத்தான் வகுப்புகளைத் தமிழில் இலவசமாக இயங்கலையில் எடுத்து,
யூடியூபில் 'படைப்பாக்கப் பொதுமங்கள்' உரிமத்தில் எல்லாக் காணொளிகளையும்
பதிவேற்றியிருக்கிறேன்.
இணைப்பு: https://www.youtube.com/watch?v=2czGQaL1vmA&list=PLgWpUXNR_WCcqOy9UljrdQMLxhmkaae8u
கூடுதலாக, கணியம் சீனிவாசன் அவர்களுடன் இணைந்து பயிற்சி எடுத்த
மாணவர்களுக்குத் திட்டப்பணி வழிகாட்டலை இரண்டு வாரங்கள் இணைந்து செய்ய
முடிவு செய்திருக்கிறோம். அதன் பொருட்டு, எல்லா மாணவர்களையும் சென்னைபை
மின்னஞ்சல் குழுவுடன் இணையச் சொல்லியிருக்கிறேன்.
எனவே, மாணவர்கள் யாராவது பைத்தான் கேள்விகள், ஐயங்களை எழுப்பினால்
சென்னைபை உறுப்பினர்கள் விடை உரைத்து உதவிட அன்புடன் வேண்டுகிறேன்.
In English:
1) We conducted Free Python Online Training during the Corona Lock down time.
2) All videos were already present in YouTube under Creative Commons License.
3) For making the trainees more comfortable in python, we planned to
conduct two weeks Mentoring. Mr. Shrinivasan from Kaniyam has also
consented for this noble service.
4) Hence, we requested all our trainees to join ChennaiPy Mailing List
for clearining their doubts and questions from experts in ChennaiPy
Team.
5) Our request here is - Kindly guide the new bies to the world of python.
Thanks.
--
முத்து.
More information about the Chennaipy
mailing list